தூத்துக்குடி மாவட்டம் மேல்மாந்தை நடுத்தெருவைச் சேர்ந்த 24 வயதான தனஜெயம், தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வருவதாகக் கூறப்படுகிறது. நேற்று மதுபோதையில் வீட்டிற்கு வந்த அவரை அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த தனஜெயம், வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சூரங்குடி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மாதவராஜ் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.