சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மனித வள மேலாண்மைத்துறை சார்பில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் போட்டித் தேர்வுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். மேலும், தூத்துக்குடி மாவட்டம் மில்லர்புரம் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதுகலை ஆசிரியர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்கள் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.