விளாத்திகுளம்: கைகளால் தொட்டாலே உரியும் புதிய தார் சாலை

828பார்த்தது
விளாத்திகுளம் அருகே மேலக்கரந்தை – அயன்ராசாபட்டி கிராமங்களை இணைக்கும் 4.9 கி.மீ புதிய தார்சாலை, ரூ. 275.42 லட்சம் மதிப்பில் 2024-2025 கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில் அமைக்கப்பட்டது. பணிகள் முடிந்து சில மாதங்களிலேயே சாலை பல இடங்களில் கைகளால் தொட்டாலே பெயர்ந்து சேதமடைந்ததால், தரமற்ற பணிக்கு பொறுப்பான ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து சாலையை உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி