தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகப் பதவியேற்ற திருமதி சங்கீதா சின்னராணி அவர்களை, தூத்துக்குடி மாவட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் (TNPGTA) சார்பில் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் இன்று (12.12.2025) நேரில் சந்தித்து மரியாதை செலுத்தினர். அப்போது, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் பணி தொகுதி தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் சங்க நிர்வாகிகள் சார்பில் முதன்மைக் கல்வி அலுவலரிடம் முன்வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் சங்கம் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.