சிப்காட் காவல் நிலைய கொலை முயற்சி வழக்கு மற்றும் தருவைக்குளம் காவல் நிலைய கஞ்சா வழக்கு தொடர்பாக சுந்தரபாண்டி (21) மற்றும் முருகன் (31) ஆகிய இருவர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டம் (1982) கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி இருவரும் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.