எட்டையாபுரம்: லாரி மீது வேன் மோதி 2 பேர் பலி

1204பார்த்தது
எட்டையாபுரம் அருகே நெடுஞ்சாலையில் நின்றிருந்த கண்டெய்னர் லாரி மீது வேன் மோதியதில் விஜயன் (58) உயிரிழந்தார். இந்த விபத்தில் வேன் டிரைவர் உட்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. இந்த விபத்தால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.