விஜய் மேடைகளில் பேசுவது காமெடி போன்றது; கடம்பூர் ராஜூ

8பார்த்தது
கோவில்பட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது நடிகர் விஜய் மேடைகளில் பேசுவது காமெடி போன்றது என்றும், அதை சீரியஸாக எடுத்துக்கொள்ள தேவையில்லை என்றும் கூறினார். மேலும், தமிழக வெற்றிக் கழகம் இன்னும் எந்தத் தேர்தலையும் சந்திக்காத கட்சி என்றும், தமிழக அரசியலில் அதிமுகவுக்கு போட்டி யாரும் இல்லை என்றும் தெரிவித்தார். திமுக கூட்டணிக் கட்சிகளை விமர்சித்த அவர், அதிமுக வலிமையாக செயல்படுவதற்கு எடப்பாடி தலைமையே காரணம் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி