குடிநீர் கேட்டு கிராம மக்கள் முற்றுகை

1பார்த்தது
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே ஆத்திகுளம் கிராமத்தில் 4 நாட்களாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து, அருந்ததியர் சமூக மக்கள் காலி குடங்களுடன் கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பல ஆண்டுகளாக மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி சுத்தம் செய்யப்படாததாலும், தண்ணீர் விநியோகத்தில் அலட்சியம் காட்டுவதாலும் இந்த நிலை ஏற்பட்டதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர். உடனடியாக நீர் தேக்கத் தொட்டியை சுத்தம் செய்து சுகாதாரமான குடிநீர் வழங்கவும், சம்பந்தப்பட்ட ஆபரேட்டர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி மனு அளித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
Job Suitcase

Jobs near you