விளாத்திகுளம் அருகே குளத்துவாய்பட்டி கிராம மக்கள், விவசாய நிலங்களுக்குச் செல்லும் பாதை பிரச்சனை நீண்ட நாட்களாக தீர்க்கப்படாததால் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, கிராம மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி, 2026 சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணாவிட்டால் போராட்டங்கள் தீவிரமடையும் என எச்சரித்துள்ளனர்.