தூத்துக்குடியில் மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் 44 வயது கற்பகம், நேற்று மதியம் தாளமுத்துநகர் மொட்டை கோபுரம் கடற்கரையில் குளிக்க முயன்றபோது ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். சிறிது நேரத்திலேயே நீரில் மூழ்கிய அவரை மரைன் போலீசார் தேடிப் பிணமாக மீட்டனர். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.