தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவியிடம் கத்தியைக் காட்டி பாலியல் வன்கொடுமைக்கு முயன்றதாக கார்த்திக்குமார் (23) என்ற இளைஞரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கார்த்திக்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.