சென்னை அண்ணாநகர், புரசைவாக்கம், நந்தனம், கடலூர் குண்டுசாலை, மதுரை எல்லீஸ்நகர், கன்னியாகுமரி வல்லன்குமாரவில்லை ஆகிய இடங்களில் வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் குடியிருப்புகள் கட்டப்படவுள்ளன. இதில் வீடுகள் பெற விரும்பும் பொதுமக்கள் tnhb.tn.gov.in என்ற இணையதளத்தில் கேட்பினை பதிவு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேதி, விவரங்கள் குறுஞ்செய்தி மூலம் பதிவு எண்ணிற்கு தெரிவிக்கப்படும்.