வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு வராதவர்கள் பயந்துட்டார்கள் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி விமர்சித்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (நவ.2) அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது. 64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 21 கட்சிகள் பங்கேற்கவில்லை. இதில் தவெக, அன்புமணி தரப்பு பாமக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன.