மாற்றத்திற்காக வாக்களித்தவர்கள், குதிரைப் பேர
அரசியல் அருவருப்புகளைக்கண்டு ஏமாற்றம் அடைந்துள்ளனர் என தவெக அரசுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், ‘குதிரை பேரமல்ல; குதிரை வேகம்’ என்பது சொல் அலங்காரமா? குதிரை கீழே தள்ளி குழியும் பறிக்கும் என்ற ஆபத்தை ஆட்சியாளர்கள் மறந்துவிடக் கூடாது.
அரசியல் வீர வசனம் பேசுவது மட்டும் அறம்சார்ந்ததாக ஒருபோதும் ஆகாது. ‘
அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றம்’ என்பது புரியட்டும் என குறிப்பிட்டுள்ளார்.