தார் லாரி தீப்பிடித்து எரிந்து 3 பேர் பலி

80பார்த்தது
தார் லாரி தீப்பிடித்து எரிந்து 3 பேர் பலி
குஜராத் மாநிலம் வதோதராவில், தார் மற்றும் ஜல்லி கற்கள் கலவை செய்யும் தொழிற்சாலையில் உள்ள லாரி தீ பிடித்து எரிந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். சூடான தார் ஜல்லியை கொட்டும்போது, திடீரென லாரி வெடித்துச் சிதறியதால் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் ஒரு லாரி ஓட்டுநர், ஒரு தூய்மைப் பணியாளர் மற்றும் ஒரு தொழிலாளி உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி