காவல் ஆய்வாளரின் கார் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

6801பார்த்தது
சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே காவல் ஆய்வாளரின் கார் மோதி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 11ஆம் தேதி இரவு பைக்கில் சென்ற பிரசாத் என்பவர் மீது காவல் ஆய்வாளரின் கார் மோதியது. இதில், தூக்கிவீசப்பட்ட பைக்கில் இருந்த பிரசாத், அவரது மானைவி சத்யா, அவர்களது 3 வயது குழந்தை அஷ்வின் ஆகியோர் உயிரிழந்தனர். இந்நிலையில், தற்போது வாகனத்தை ஓட்டிச் சென்ற காவலர் பாலமுருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி