'துள்ளுவதோ இளமை' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகர் அபினய் (43), உடல்நலக் குறைவால் காலமானார். கல்லீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (நவ.10) அவர் உயிரிழந்தார். இவரது மறைவு செய்தி தமிழ் திரையுலக வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.