குஜராத்: கோல்டன் டெம்பிள் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த சிறுமிக்கு டிக்கெட் பரிசோதகர் பாலியல் தொல்லை அளித்ததாக அதிர்ச்சி புகார் எழுந்துள்ளது. வடோதரா ரயில் நிலையத்தில் முதல் ஏசி பெட்டியை காண்பிப்பதாகக் கூறி சிறுமியை அழைத்துச் சென்ற டி.டி.
சஞ்சய் பாபுலால் ஜின்னா, அங்கு தகாத முறையில் நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிராவில் சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் வடோதரா ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.