திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 1ஆம் தேதிகளில் சொர்க்க வாசல் தரிசனம் நடைபெறுகிறது. இந்த சிறப்பு தரிசனத்திற்கு டிக்கெட்டுகள் இருந்தால் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. டிக்கெட்டுகள் இல்லாத பக்தர்கள் ஏமாற்றம் அடைய வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.