நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேர்வர் சோலை பகுதியில் கடந்த மூன்று மாதங்களாகக் கால்நடைகளை வேட்டையாடி வந்த புலி ஒன்று வனத்துறையினரால் வெற்றிகரமாகப் பிடிக்கப்பட்டது. இந்தப் புலி 20-க்கும் மேற்பட்ட கால்நடைகளை வேட்டையாடியதாகக் கிராம மக்கள் புகார் அளித்திருந்தனர். பிடிபட்ட அந்தப் புலியை வனத்துறையினர் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் கொண்டு சென்று பாதுகாப்பாக விட்டனர்.