நீலகிரி மாவட்டம் கூடலூர், தேவர் சாலை பகுதியில் புலி நடமாடி வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விதிக்கப்பட்டுள்ளது. பகல் வேளைகளில் வீட்டின் கதவை திறக்க வேண்டாம். இரவில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யவோ, நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ள வேண்டாம். கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.