மதுரை மாவட்டத்திலுள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் சோழவந்தான் தனி தொகுதியாகும். இத்தொகுதியில் தற்போது திமுக எம்.எல்.ஏ.வாக வெங்கடேசன் உள்ளார். இவர் அமைச்சர் பி.மூர்த்தியின் தீவிர ஆதரவாளர். இவரை எதிர்த்து, அதிமுக சார்பில் இத்தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் களமிறங்கியுள்ளார். இருவருக்கும் அந்த தொகுதியில் அதிக செல்வாக்கு உள்ளது. இந்த சூழலில், முன்னாள் எம்எல்ஏ கருப்பையா தவெக சார்பில் களத்தில் உள்ளதால், இத்தொகுதி சூடுபிடித்து வருகிறது.