திருச்செந்தூர்-நெல்லை ரயில் 3 நாள்கள் ரத்து

13பார்த்தது
திருச்செந்தூர்-நெல்லை ரயில் 3 நாள்கள் ரத்து
நெல்லை ரயில் நிலைய விரிவாக்கப் பணிகள் நடைபெறுவதால் திருச்செந்தூர்-நெல்லை பயணிகள் ரயில் 3 நாள்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. நெல்லை ரயில் நிலையத்தில் 5 நடைமேடைகள் உள்ள நிலையில் கூடுதலாக ஒரு நடைமேடை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதனால் திருச்செந்தூரில் இருந்து காலை 10.10க்கு புறப்பட்டு நெல்லை செல்லும் பயணிகள் ரயில் நாளை (நவ., 13) முதல் 3 நாள் ரத்து செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி