
அடிவயிற்று கொழுப்பைக் குறைக்க பெண்களுக்கு டாப்ஸி அறிவுரை
பெண்கள் தங்கள் அடிவயிற்று கொழுப்பைக் குறைக்க கடுமையாக உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று நடிகை டாப்ஸி வலியுறுத்தியுள்ளார். வளரும் பருவத்தில் ஆரோக்கியமாக இருந்தும், தனது அடிவயிற்றில் கொழுப்பு இருந்ததால், அதை குறைக்க அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்ததாகவும், இதனால் உடல் எடை குறைவதற்கு பதிலாக, உடல் தண்ணீரைத் தக்க வைத்து, கொழுப்பு அதிகரித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இனப்பெருக்க உறுப்புகளைப் பாதுகாக்க அடிவயிற்றுப் பகுதியில் சிறிதளவு கொழுப்பு அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.





































