
திருச்சி: மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் 2 லட்சம் இருக்கைகள்
திருச்சி பஞ்சப்பூரில் இன்று என்டிஏ கூட்டணி சார்பில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் 2 லட்சம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.






































