லால்குடி குமுளூர் அரசு கல்லூரியில் 2நாள் சிறப்பு கலந்தாய்வு

69பார்த்தது
லால்குடி குமுளூர் அரசு கல்லூரியில் 2நாள் சிறப்பு கலந்தாய்வு
திருச்சி மாவட்டத்தில் லால்குடி வட்டத்தில் குமுளூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பு கலந்தாய்வு இன்று இரண்டாம் தேதி மற்றும் நாளை மூன்றாம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. 

இந்த கலந்தாய்வுக்கு விளையாட்டுப் பிரிவில் 460 பேரும் என்சிசி 135 பேரும் மாற்றுத்திறனாளி பிரிவில் 63 பேரும் முன்னாள் படை வீரர்கள் பிரிவில் 5 பேரும் அந்தமான் நிக்கோபார் தீவுகளைச் சேர்ந்தவர்கள் பிரிவில் இரண்டு பேரும் பாதுகாப்பு படை வீரர்கள் பிரிவில் 5 பேரும் விண்ணப்பித்துள்ளனர். 10 இலக்கியப் பாடத்திற்கு 18,642 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் தமிழ் இலக்கியத்திற்கு 2,649 பேரும் ஆங்கில இலக்கியத்திற்கு 1,412 பேரும் கணினி அறிவியல் பிரிவிற்கு 226 பேரும் தகவல் தொழில்நுட்பப் பிரிவிற்கு 1,500 பேரும் கணினி பயன்பாட்டுப் பிரிவிற்கு 2,024 பேரும் பிபிஏ பாடப்பிரிவிற்கு 2,013 பேரும் பிகாம் பிரிவிற்கு 2,022 பேரும் வரலாற்றுப் பாடத்திற்கு 122 பேரும் இயற்பியல் பாடத்திற்கு 1,008 பேரும் பிஎஸ்சி பயோ டெக்னாலஜிக்கு 1,856 பேரும் விண்ணப்பித்துள்ளனர். 

பொது பிரிவு கலந்தாய்வு இம்மாதம் நான்காம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. பொது கலந்தாய்வில் சேர விரும்பும் மாணவர்கள் தங்களது அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும் என முதல்வர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி