திருச்சி புத்தூர் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் தீபிகா தலைமையிலான போலீசார் புத்தூர் மெயின் ரோட்டில் உள்ள டீக்கடை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த மூன்று வாலிபர்கள் போதை மாத்திரை விற்பனை செய்து கொண்டிருந்தனர். அவர்களை மடக்கிப் பிடித்த போலீசார், விசாரணை நடத்தியதில் அவர்கள் புத்தூர் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த பிரகாஷ் (21), ஜெய நவீன் ராஜ் (22), ராஜபாண்டி (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மூவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 26 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.