துவரங்குறிச்சி அருகே பிடிபட்ட 6அடி நீள கண்ணாடிவிரியன் பாம்பு

903பார்த்தது
துவரங்குறிச்சி அருகே பிடிபட்ட 6அடி நீள கண்ணாடிவிரியன் பாம்பு
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி துலுக்கம்பட்டி பகுதியில் பிச்சை என்பவரது விறகு பட்டறை அருகே சுமார் 6 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று காணப்பட்டது. இதனைக் கண்ட பிச்சை, துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், பாம்பு பிடிப்பான் உதவியுடன் சிறிது போராட்டத்திற்குப் பிறகு பாம்பைப் பிடித்து வனப்பகுதிக்குள் விடுவித்தனர். துவரங்குறிச்சி பகுதியில் சமீப காலமாக குடியிருப்புகளில் பாம்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி