திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், பட்டா வேண்டி, பட்டா மாற்றம், விதவை உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, ஊனமுற்றோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 674 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவிட்டுள்ளார். வழக்கமாக ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடைபெறும் இக்கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளித்து வருகின்றனர்.