திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீா்ப்பணி நிலையம், டா்பன் நீரேற்று நிலையம், பெரியாா் நகா் கலெக்டா் வெல் நீரேற்று நிலையம்-1, வெல்-3 மற்றும் கலெக்டா் வெல் நீரேற்று நிலையம் - 2 ஆகிய நீரேற்று நிலையங்களுக்கு மின் விநியோகம் வழங்கும் கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால், விறகுப்பேட்டை, மரக்கடை, மலைக்கோட்டை, சிந்தாமணி, உறையூா், ஜங்க்ஷன், கருமண்டபம், உய்யக்கொண்டான் மலை, விஸ்வாஸ் நகா், மிளகுபாறை உள்ளிட்ட மேல்நிலை நீா்தேக்க தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீா் விநியோகம் புதன்கிழமை ஒருநாள் மட்டும் இருக்காது.