ஈரானில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, திருச்சி விமான நிலையத்திலிருந்து நேற்று பிப்ரவரி 28ஆம் தேதி மதியம் ஒரு மணிக்கு துபாய்க்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், திருச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறையின் உத்தரவின் பேரில் மீண்டும் திருச்சிக்குத் திரும்பியது. இதனால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.