திருச்சி மாவட்டம் வாத்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செட்டிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர் சிவஞானம், தீராத வயிற்று வலியால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 14ஆம் தேதி அன்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற அவரை திருச்சி அரசு மருத்துவம
னையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். வாத்தலை போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.