துறையூரில் குளியல் அறையில் வழுக்கி விழுந்த மூதாட்டி பலி

3பார்த்தது
துறையூரில் குளியல் அறையில் வழுக்கி விழுந்த மூதாட்டி பலி
திருச்சி மாவட்டம் துறையூர் உயர்நிலைப்பள்ளி சாலை பகுதியில் வசித்து வந்த 83 வயது மூதாட்டி சரோஜா, கடந்த 14ஆம் தேதி அன்று வீட்டின் குளியலறையில் வழுக்கி விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். துறையூர் போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி