திருச்சி ஸ்ரீரங்கம் பள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த கற்பகம் தனது பாட்டி அகிலாம்பாளுடன் இருசக்கர வாகனத்தில் கள்ளக்காடு பகுதிக்குச் சென்று கொண்டிருந்தபோது, கீரிக்கல்மேடு பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் ஓட்டி வந்த பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கீழே விழுந்த மூதாட்டி அகிலாம்பாள் பலத்த காயமடைந்து, அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.