திருச்சியில் பயிர்களை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

80பார்த்தது
திருச்சியில் பயிர்களை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
திருச்சி மாவட்டத்தில் இவ்வாண்டில் ராபி பருவத்தில் அறிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் சாகுபடி செய்துள்ள கரும்பு பயிருக்கு மார்ச் 31ஆம் தேதி வரை விவசாயிகள் தங்கள் பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம் என வேளாண்மை இணை இயக்குனர் வசந்தா தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள அறிக்கையில் திருச்சி மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டிற்கு ராபி பருவத்தில் பயிர் காப்பீடு அறிக்கை செய்யப்பட்ட பகுதியில் சாகுபடி செய்துள்ள நிலக்கடலை மற்றும் கரும்பு பயிருக்கு பயிர் காப்பீடு செய்யலாம் விவசாயிகள் தங்கள் சாகுபடி செய்துள்ள பயிர்கள் இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் மகசூல் இழப்பிற்கு ஈடு செய்து வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் இவ்வாண்டில் ராபி பருவத்தில் அறிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் சாகுபடி செய்துள்ள கரும்பு பயிருக்கும் மார்ச் 31ஆம் தேதி வரை விவசாயிகள் தங்கள் பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே காப்பீடு செய்ய வேளாண்மை இணை இயக்குனர் வசந்தா கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி