சமயபுரம் சாலைகளில் மாடுகள் திரிந்தால் அபராதம்- எச்சரிக்கை

609பார்த்தது
சமயபுரம் சாலைகளில் மாடுகள் திரிந்தால் அபராதம்- எச்சரிக்கை
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் சாலையில் சுற்றித் திரிந்த மாடு மோதி முதியவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சமயபுரம் பேரூராட்சி தலைவர் சரவணன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதன்படி, சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிந்தால் முதல் முறை ஒப்புதல் கடிதம் வாங்கி ஒப்படைக்கப்படும் என்றும், இரண்டாவது முறை அதே மாடுகள் பிடிக்கப்பட்டால் 3000 முதல் 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இந்த அறிவிப்பு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி