மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, நவம்பர் 7ஆம் தேதி திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு உணவு வழங்கினர். இந்த நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள் பங்கேற்று ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவினர்.