திருச்சி மாவட்டம் முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நேற்று பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியில், திருச்சி நேஷனல் கல்லூரி அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் நேஷனல் கல்லூரி அணி 121 ரன்கள் எடுத்தது. பாரதிதாசன் பல்கலைக்கழக அணி 100 ரன்களில் சுருண்டது.