மணப்பாறை அருகே அணைக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆன்டனி, தனது மனைவி தெரஸ்டன் உடன் இருசக்கர வாகனத்தில் கரடுப்பட்டி பகுதியில் சென்றபோது, முன்னால் சென்ற வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானார். இதில் ஆன்டனி படுகாயமடைந்து உயிரிழந்தார். அவரது மனைவி தெரஸ்டன் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.