திருச்சியில் த. மா. க தலைவர் ஜி. கே. வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், திமுகவின் அதிகார வர்க்கத்திற்கு பயந்து அவர்களின் கூட்டணி கட்சிகள் எஸ். ஐ. ஆர். தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாகக் கூறினார். தேர்தல் தோல்வி பயத்தின் காரணமாகவே தேர்தல் ஆணையத்தின் மீது குற்றச்சாட்டு வைக்கிறார்கள் என்றும், அதிமுக - பாஜக இணைந்து தேர்தலில் வெற்றி பெற யூகம் வகுத்து வருவதாகவும் தெரிவித்தார். திமுகவை வீழ்த்த நினைக்கும் கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு வருவார்கள் என்றும் அவர் கூறினார்.