லால்குடி அருகே சரடமங்கலத்தில் இருந்து விவசாய பணிக்குச் சென்ற 31 பெண்களை ஏற்றிச் சென்ற லோடு ஆட்டோ மீது மால்வாய் வழியாகச் சென்ற மினி லாரி மோதி விபத்துக்குள்ளானதில், நான்கு பெண்கள் படுகாயம் அடைந்து அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கள்ளக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.