லால்குடி: குட்கா விற்ற இருவர் கைது 107 கிலோ குட்கா பறிமுதல்

2பார்த்தது
லால்குடி: குட்கா விற்ற இருவர் கைது 107 கிலோ குட்கா பறிமுதல்
திருச்சி மாவட்டம் லால்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் அவர்களின் தனிப்படை போலீசார் பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை மேற்கொண்டனர். அப்போது நிவாஸ் என்பவர் பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த போது போலீஸாரிடம் சிக்கினார். அவருக்கு புகையிலைப் பொருட்களை சப்ளை செய்த ராஜா உள்ளிட்ட இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 107 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி