திருச்சி சமயபுரம் புது தெருவைச் சேர்ந்த சுலோச்சனா, அல்லித்துறை பகுதியில் அரசு பேருந்தில் சென்றுகொண்டிருந்தபோது, மர்ம நபர் ஒருவர் அவரது கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை சவரன் தங்க நகையைப் பறித்துச் சென்றார். இது குறித்து காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், எடமலைப்பட்டி புதூரைச் சேர்ந்த குமார் என்பவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட செயின் மீட்கப்பட்டது. மேலும், குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.