கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பார்வையற்ற சிறுமி ஒருவர் திருச்சி பார்வையற்றோர் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவர் தற்கொலை செய்து கொண்டார். தனது மகள் பாலியல் தொந்தரவால் தற்கொலை செய்து கொண்டதாக மாணவியின் தாய் புகார் அளித்திருந்தார். புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி தாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதை விசாரித்த நீதிபதி, மாவட்ட எஸ்பி தலைமையில் தனிப்படை அமைத்து, நான்கு வாரங்களுக்குள் வழக்கை விசாரணை நடத்தி முடிக்க உத்தரவிட்டார்.