திருச்சியில் தனியார் நிறுவன ஊழியரான வினோத்திடம், முகநூல் மூலம் அறிமுகமான மர்ம நபர் ஒருவர் ஆன்லைன் வர்த்தகத்தில் 200 மடங்கு லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பி வினோத் பல தவணைகளாக 7 லட்சத்து 65 ஆயிரம் ரூபாயை வங்கிக் கணக்கு மூலம் அனுப்பியுள்ளார். பணத்தை அனுப்பிய பிறகு அவர்களை தொடர்பு கொள்ள முடியாததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வினோத், திருச்சி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.