பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியைச் சேர்ந்த நவீன்குமார் (26) என்பவர் தஞ்சாவூர் டவுன் போலீஸ் நிலையத்தில் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டார். சிறையில் கஞ்சா வைத்திருந்ததாக அவர் அறை எண் 19-ல் இருந்து 10-ம் எண்ணுக்கு மாற்றப்பட்டார். இது தொடர்பாக சிறை அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்த நவீன்குமார், குளியல் அறை சுவரில் இருந்த ஓடுகளை உடைத்து தன்னைத்தானே கிழித்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது அவர் சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.