திருச்சி உணவு பாதுகாப்புத்துறை அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

3பார்த்தது
திருச்சி தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரியில் குளிர்பானத்தில் புழு இருந்ததை அறியாமல் குடித்த ஆறு மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை வழங்காமல் காலம் தாழ்த்தும் உணவு பாதுகாப்புத் துறையைக் கண்டித்து, இந்திய மாணவர் சங்கத்தினர் திருச்சி உணவு பாதுகாப்புத் துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாணவர்களின் உடல்நிலையில் அக்கறை காட்டாத அதிகாரிகளின் அலட்சியப் போக்கிற்கு அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி