திருச்சி கேகே நகர் பகுதியில் உள்ள திருவாகமணி தெருவில் சுமார் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள ஒரு மின்கம்பம் பெயர்ந்து முற்றிலும் சேதமடைந்து, சிமெண்ட் கலவைகள் உதிர்ந்து எலும்பு கூடாய் காட்சி அளிக்கிறது. இது குறித்து பலமுறை மின்வாரியத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மின்கம்பம் சரிந்து விபத்து ஏற்படுவதற்கு முன், அதை மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.