முசிறி அருகே சாலையோரம் உயிரிழந்த நிலையில் கிடந்த புள்ளிமான்

340பார்த்தது
திருச்சி மாவட்டம் முசிறி அருகே தண்டலை புத்தூர் கிராமத்தில் சாலையோரம் உயிரிழந்த நிலையில் புள்ளிமான் கண்டெடுக்கப்பட்டது. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், புள்ளிமான் உயிரிழந்ததற்கான காரணத்தை அறிய அதன் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி