தொட்டியம் அருகே உள்ள வரதராஜபுரம் பகவதி அம்மன் கோவில் அருகே பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பெயரில் தொட்டியம் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட வரதராஜபுரத்தைச் சேர்ந்த கரிகாலன் வினோத்குமார், தைலம்பாளையத்தைச் சேர்ந்த பெரியசாமி ஆகிய மூவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சீட்டாட பயன்படுத்தப்பட்ட சீட்டுக்கட்டுகள், 500 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.